தசாவதாரம் படத்தை கலைஞர் தொலைக்காட்சி வாங்கியதை முன்பு வதந்தியாகச் சொன்னார்கள். நாளை மறுநாள் படம் வெளியாகும் நிலையில் வதந்தி உண்மையாகி இருக்கிறது.
சிவாஜியைப் போல தசாவதாரத்திற்கும் சன் தொலைக்காட்சியே போட்டி. முதல்வரின் தொலைக்காட்சி என்பதால் கலைஞருக்கே பேரம் படிந்துள்ளது. தசாவதாரத்திற்கு கொடுக்கப்பட்டது ஏறக்குறைய ஐந்து கோடி ரூபாயாம்.
வேட்டையாடு விளையாடு, பில்லா, குருவி என மெகாஹிட் படங்களை சொல்லி வைத்து வாங்கியிருக்கிறது கலைஞர். இரண்டாம் வரிசைப் படங்களுக்கும் இழுபறி. கலைஞருக்குப் போட்டியாக விரைவில் ஒளிபரப்பைத் தொடங்கும் ஸீ தமிழ் சானலும் இப்போது அரங்கில் உண்டு.
விஜயகாந்தின் அரசாங்கம், பார்த்திபனின் வல்லமை தாராயோ படங்களை வாங்கி கலைஞருக்கு டஃப் கொடுக்கிறது ஸீ டி.வி. ஆனாலும் ஆட்சியிலிருக்கும் வரை போட்டியில் முதலிடம் கலைஞருக்கே.