கருத்தம்மா மகேஸ்வரிக்கு விரைவில் திருமணம். மணமகன்? மகேஸ்வரி பலகாலமாகக் காதலித்து வந்த அதே ஹைதராபாத் தொழிலதிபர்.
நடிக்கும்போதே மகேஸ்வரிக்குக் காதல். இது இரு வீட்டாருக்கும் தெரியவந்தபோது பிரச்சனை பூதாகரமானது. எதிர்ப்பு வந்தால்தானே காதல் இனிக்கும்! இனிக்க இனிக்க பலகாலம் தொடர்ந்து காதல். இனியும் பிரிக்க முடியாது என்ற தெளிவு வந்தவுடன் இறங்கி வந்தனர் பெற்றோர்.
அப்படி நெடுநாளைய காதலர்கள் பெற்றோர் ஆசீர்வாதத்துடன் திருமணம் செய்யப் போகிறார்கள். விரைவில் திருமணத் தேதி அறிவிக்கப்படுமாம்.