'லீ' பிரபு சாலமனின் புதிய படம் லாடம். என்ன தைரியத்தில் புதுமுகம் ஒருவரை ஹீரோவாக்கினார் என்ற மர்மம் இதுவரை யாருக்கும் தெரியாது. அதேபோல ஹீரோயின். தமிழ் ரசிகர்கள் மறந்துவிட்ட சார்மி.
தெலுங்கில் சார்மிக்கு நல்ல மார்க்கெட். யார் படமெடுத்தாலும் சார்மிக்கு ஒரு ரோலும், கவர்ச்சியான ஒரு சீனும் நிச்சயம். தெலுங்கில் சார்மி மினிமம் கேரண்டி என்பதால், அவரை நம்பி லாடத்தை தெலுங்கிலும் வெளியிடுகிறார்கள்.
தெலுங்கில் லாடத்தின் பெயர் 16 டேஸ்! சார்மிக்கு ஒரு கவலை இருந்தது. அழகைப் பயன்படுத்திக்கொள்ளும் இயக்குநர்கள் குரலைப் பயன்படுத்துவது இல்லையே!
அந்தக் குறையும் இதோடு தீர்ந்தது. 16 டேஸில் சார்மியைச் சொந்தக் குரலில் டப்பிங் பேச வைக்கப் போகிறாராம் பிரபு சாலமன்.
சார்மிக்குத் தமிழ் தகராறு என்பதால் தப்பித்தான் தமிழ் ரசிகன்!