ஆஸ்கர் ரவிச்சந்திரனின் பிபியை எகிற வைக்காமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது. தசாவதார டிக்கெட் விற்பனை தொடங்கிய பிறகும் படத்துக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட் சென்றுள்ளது ஒரு ஆன்மிக கோஷ்டி.
இந்து மதத்தை இழிவுபடுத்துவதாக தசாவதாரம் மீது தொடரப்பட்ட வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு தசாவதாரத்துக்கு சாதகமாக அமைந்தது. கற்பனையான குற்றச்சாட்டு என புகார் மனுக்களை நிராகரித்தது ஐகோர்ட்.
தீர விசாரிக்காமல் ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியதாக சுப்ரீம் கோர்ட்டில் பக்தவச்சலம், கோவிந்த ராமானுஜ தாசா ஆகிய இருவரும் மேல் முறையீடு செய்துள்ளனர். தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான கிளிப்பிங்ஸை அடிப்படையாகக் கொண்டு இந்த மனு அளிக்கப்பட்டுள்ளது.
தசாவதாரம் வெளியானால் பாரத யுத்தம் வெடிக்கும் என்ற ரீதியில் தயாரிக்கப்பட்டுள்ளது இந்த மனு. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு எப்படி அமைகிறது என்பதை இருதரப்புமே ஆவலாக எதிர்பார்க்கிறது.