'கார்த்தீகை' படத்தில் இரண்டு ஹீரோயின்கள். மாளவிகா, சமிக் ஷா. கர்ப்பத்தையும் பொருட்படுத்தாமல் நடித்துக் கொண்டிருக்கிறார் மாளவிகா.
படத்தில் இவருக்கு குத்துப் பாடலொன்று இருக்கிறது. கர்ப்பத்துடன் குதித்து ஆட முடியாது என்பதால் குத்துப்பாடலை சமிக் ஷாவுக்கு தாரை வார்த்திருக்கிறார்கள். இதனால் தலைகால் புரியாத சந்தோஷத்தில் இருக்கிறார் சமிக் ஷா.
கார்த்தீகை குறித்து இன்னொரு தகவல். படத்தில் பவர்ஃபுல்லான கெஸ்ட் ரோல் ஒன்று உள்ளது. இதில் விஜயகாந்த் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறார் இயக்குனர். தைரியமாக அவரிடம் கால்ஷீட் கேட்பது என முடிவு செய்துள்ளனர்.
கேப்டன் பயர் ஆகாமல் இருக்க வேண்டும்!