கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடிக்கும் படத்திலிருந்து விலகிவிட்டார் சினேகா. ஸ்ரேயாவின் அம்மாவாக நடிக்கச் சொன்னதால்தான் இந்த விலகல்.
சினேகா வெளியேறிவிட்டதால், ஸ்ரேயாவுக்கு அழகான அம்மா ஒருவரை தேடவேண்டிய நிலை. தமிழில் அப்படி யாரும் அகப்படபோவதில்லை என்பதால், தபுவிடம் பேசியிருக்கிறார்கள்.
கமர்ஷியல் படங்களை அதிகம் ஒத்துக்கொள்ளாமல் கலைப் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் தபு. கமர்ஷியல் படமென்றால் அவரது ஒரே எதிர்பார்ப்பு, பணம்! இதுவோ ஸ்ரேயாவுக்கு அம்மா. கூசாமல் சரத்குமார் அளவுக்கு சம்பளம் கேட்டிருக்கிறார்.
தந்தால் லாபம், தரவில்லையென்றாலும் லாபம்! தாரசு இப்போதைக்கு தபு பக்கமே தாழ்ந்திருக்கிறது.