Entertainment Film Featuresorarticles 0806 09 1080609059_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எம்.ஆர். ராதாவுக்கு மரியாதை!

Advertiesment
எம்.ஆர். ராதாவு நடிகர் சங்கம்
, திங்கள், 9 ஜூன் 2008 (19:57 IST)
எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்டார் என்ற ஒரே காரணத்தால் அரசுகளாலும், பிறராலும் ஒதுக்கப்பட்ட மகா கலைஞன் நடிகவேள் எம்.ஆர். ராதா.

ஒரு சிறிய நினைவுக் கூட்டம் கூட நடத்தாமல் இந்தக் கலைஞனின் நூற்றாண்டு விழா அனைவராலும் புறக்கணிக்கப்பட்டது. நடிகவேளின் ரசிகர்களின் நொந்துபோன மனதுக்கு தெம்பு தரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது நடிகர் சங்கம்.

நேற்று நடந்த சங்க பொதுக் குழுக் கூட்டத்தில், எம்.ஆர். ராதாவின் உருவச் சிலையை நடிகர் சங்க வளாகத்தில் திறப்பதென முடிவு செய்யப்பட்டது. எம்.ஜி.ஆர்., சிவாஜி சிலைகளும் எம்.ஆர். ராதா சிலையுடன் அமைக்கப்படும்.

இதுதவிர, வேறு சில தீர்மானங்களும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. சங்கத்துக்கு சங்க உறுப்பினர்கள் தங்கள் சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை நன்கொடையாக தரவேண்டும்.

சங்கத்தில் உறுப்பினர் அல்லாதவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமை.

நடிப்பு கல்லூரி தொடங்குவது, சங்கத்திற்கென புதிய கட்டடங்கள் கட்டுவது... இப்படி நிறைய தீர்மானங்கள்.

பொதுக் குழுவில் கலந்துகொள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. ரஜினி, கமல், விக்ரம், விஜய், அஜித், சூர்யா, விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் அனைவரும் அழைப்பை புறக்கணித்தது ஆச்சரியம்!

Share this Story:

Follow Webdunia tamil