பழைய நினைப்பு பொழைப்பை கெடுத்தது என்ற பழமொழி யாருக்கு பொருந்துகிறதோ, மன்சூருக்கு சாலப் பொருத்தம்.
கேப்டன் பிரபாகரனில் குதிரை சவாரி செய்திருக்கிறார் மன்சூர். அதன் பிறகு குதிரையை கண்ணால் பார்ப்பதோடு சரி.
இந்நிலையில் மகாபலிபுரத்தில் நடந்த கந்தசாமி படப்பிடிப்பில் கலந்து கொண்டவர், போதிய பயிற்சி இல்லாத குதிரை மீது ஏறியிருக்கிறார். பயத்திலா மன்சூரின் பாரத்திலே தெரியவில்லை. தறிகெட்டு ஓடியிருக்கிறது குதிரை. உயிர் பிழைக்க குதிரை மீதிருந்து குதித்துள்ளார் மன்சூர். இதில் தோள்பட்டை எலும்பு உடைய, உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
உடைந்த எலும்பு சரியாக ஒன்றிரண்டு வாரங்கள் ஆகிவிடுமாம். அதுவரை மன்சூர் கட்டிலை விட்டு நகரக் கூடாது என்பதால், மன்சூர் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்காமல் ஒதுக்கி வைத்துள்ளனார் சுசி.கணேசன்.