தமிழ் கேடியில்தான் அறிமுகம். ஆனாலும், கோடி கொடுத்தாலும் தமிழில் நடிக்கமாட்டேன் என்று முறுக்கிக் கொண்டார் இலியானா. அஜித், விஜய், சூர்யா என முதல் வரிசை ஹீரோக்களுக்கே முகம் காட்ட மறுத்தவர், இப்போது இறங்கி வந்திருக்கிறார்.
தெலுங்கில் முதன் முதலில் கோடியில் சம்பளம் வாங்கிய நடிகை என்ற பெருமை இலியானாவுக்கு உண்டு. இவரது வேகத்தில் த்ரிஷாவின் சிம்மாசனமே ஆட்டங்கண்டது. தெலுங்கில் முதலிடத்தில் இருக்கும்போது, தன்னைப் புறக்கணித்த தமிழுக்கு ஏன் வரவேண்டும் என்பது இலியானாவின் கேள்வி.
எப்படியோ... இந்த இடையழகி தனது பிடிவாதத்திலிருந்து இறங்கி வந்துள்ளார். கே.எஸ். ரவிக்குமார் விக்ரமை வைத்து இயக்கும் படத்தில் இலியானாதான் நாயகி.
உடனே பசை வாளியுடன் இலியானாவுக்கு போஸ்டர் ஒட்ட கிளம்ப வேண்டாம். விக்ரம் மணிரத்னத்தின் படத்தை முடித்துவிட்டு, கே.எஸ். ரவிக்குமாரின் படத்துக்கு வர அடுத்த வருட இறுதியாகிவிம். அதற்குள் இலியானாவின் பசை மாதிரி இறுகிப் போகவும் வாய்ப்புள்ளது.