Entertainment Film Featuresorarticles 0806 07 1080607038_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோய்ன் பிரதர்ஸ் திரைப்பட விழா!

Advertiesment
கோய்ன் பிரதர்ஸ் திரைப்பட விழா
, சனி, 7 ஜூன் 2008 (19:16 IST)
சென்னை சினிமா ரசிகர்களுக்கு இதைவிட இனிப்பான செய்தி இருக்க முடியாது. சென்னையில் இயங்கிவரும் ஃபிரெஞ்ச் கலாச்சார மையமான அல்யன்ஸ் ஃபிரான்சியஸ் கோய்ன் சகோதரர்களின் திரைப்பட விழாவை நடத்துகிறது.

ஈதல் கோய்ன், ஜோயல் கோய்ன். ஹாலிவுட்டின் பிரபலமான பெயர்கள். இந்த கோய்ன் சகோதரர்களின் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. இவர்களின் நோ கண்ட்ரி ஃபார் ஓல்டு மென் திரைப்படம் சென்ற வருடம் சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதை இவர்களுக்குப் பெற்றுத் தந்தது. இதுதவிர, சிறந்த திரைப்படம் உள்பட மூன்று விருதுகள் இப்படத்திற்கு கிடைத்தன.

வரும் திங்கள் முதல் வியாழன் வரை அல்யன்ஸ் ஃபிரான்சியஸ் கோய்ன் சகோதரர்களின் திரைப்படங்களை திரையிடுகிறது. முதல் நாள் Fargo. இரண்டாம் நாள் The Big Lebowski. மூன்றாம் மற்றும் இறுதி நாள் முறையே Barton Fink, O Brother, Where Art Thou.

கோய்ன் சகோதரர்களின் திரை மொழியை, ஆளுமையை ரசிக்க இது சரியான சந்தர்ப்பம், தவறவிடாதீர்கள்!

Share this Story:

Follow Webdunia tamil