Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாயாசிங்கின் அதிர்ச்சி முடிவு!

Advertiesment
சாயாசிங்கின் அதிர்ச்சி முடிவு!
, வெள்ளி, 6 ஜூன் 2008 (19:53 IST)
நடிகைகள் அவ்வப்போது அ‌திர்ச்சி முடிவுகள் எடுத்தாலும், சாயாசிங்கின் முடிவு, அப்பப்பா... பயங்கரம்!

திருடா திருடியில் அறிமுகமான சாயாசிங் எண்ணி ஐந்து படங்கள் நடித்திருக்கமாட்டார். அவரை தமிழக ஜனங்கள் நினைவு வைத்திருக்க கைவசமிருக்கும் ஒரே துருப்புச் சீட்டு வல்லமை தாராயோ, இந்தப் படமும் ரிலீஸானால், சாயாச சிங்... சாய்ந்த சிங்!

சினிமாவில் தன்னை மீண்டும் பிணைத்துக் கொள்ள சாயாசிங் எடுத்திருக்கும் அதிர்ச்சியான முடிவு, இயக்குனராவது! ஆமாம், டைரக்சனேதான்?

நடித்த நாலு படத்தில் டைரக்சன் கோர்ஸ் சாயாசிங்கிற்கு தண்ணிப்பட்ட பாடாகிவிட்டதாம். வாய்ப்பு கிடைத்தால் மணிரத்னத்துக்கே டஃப் கொடுக்கும் படம் எடுப்பாராம். கேமராவை இயக்கி பி.சி. ஸ்ரீராமை ஓரம்கட்டும் ஐடியாவும் உண்டாம்.

தமிழர்களின் நலனுக்காவது அப்படியொரு சம்பவம் நடக்கக்கூடாது. கடவுள் கருணை காட்டட்டும்!

Share this Story:

Follow Webdunia tamil