Publish Date: Fri, 06 Jun 2008 (19:51 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (22:44 IST)
மணிரத்னம் படம் குறித்த செய்திகள் அவரது படங்களின் ஒளிப்பதிவு போல இருட்டாகவே இருக்கும். தட்டுத்தடுமாறி நாம்தான் ஒவ்வொன்றாக கண்டுபிடிக்க வேண்டும். கடைசி நிமிடம் வரை அவரிடமிருந்து ஒரு சொல்லும் பெயராது.
அவரது புதிய படம் தமிழ், இந்தி இருமொழிகளில் தயாராகிறது. இந்தியில் அபிஷேக், ஐஸ்வர்யா ராய். தமிழில் விக்ரம் ஐஸ்வர்யா ராய். தமிழ்ப் படத்தில் ப்ருத்விராஜ் நடிப்பது உறுதியாகியிருக்கிறது.
படம் குறித்த லேட்டஸ்ட் தகவல், ப்ரியாமணி நடிப்பது. முக்கிய வேடமொன்றில் ப்ரியாமணி நடிப்பதாக மணிரத்னத்தின் அலுவலக வட்டாரம் தெரிவிக்கிறது.
அலைபாயுதேக்குப் பிறகு மணிரத்னத்துடன் இணைகிறார் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம். இசை வழக்கம் போல ஏ.ஆர். ரஹ்மான்.
செப்டம்பரில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளார் மணிரத்னம்.