மொத்தம் ஆயிரம் பிரிண்டுகள் என்றார்கள். தினம் வரும் செய்திகளைப் பார்த்தால் ஆயிரத்தைத் தாண்டும் போல் தெரிகிறது.
அமெரிக்காவில் மட்டும் தசாவதாரம் நாற்பது இடங்களில் வெளியாகிறதாம். இதில் முப்பது இடங்களில் தமிழ். தென்னிந்தியத் திரைப்படம் ஒன்றுக்கு அமெரிக்காவில் இத்தனை பிரிண்டுகள் போடப்படுவது இதுவே முதன் முறை. தவிர அங்கு ஆன்லைனில் டிக்கெட் விற்பனையும் துவங்கியுள்ளது. இதுவரை ஆயிரக்கணக்கில் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. இது சராசரித் தமிழ்ப் படத்தைவிட பத்து மடங்கு அதிகம்.
சிகாகோ கமல் ரசிகர்கள் பத்து விதமான தோசைகளை வைத்து விருந்து நடத்தியதுடன், டிக்கெட்டுகளையும் இலவசமாக தந்து தசாவதார வருகையை கொண்டாடியுள்ளனர். ரிலீஸ் தேதி நெருங்கும் போது கொண்டாட்டம் அமெரிக்கர்களை ஈர்க்கும் அளவுக்கு அதிகரிக்கும். அமெரிக்காவில், உடல் மண்ணுக்கு அயில் கமலுக்கு கோஷம் ஒலிப்பதைக் கேட்பது சுவாரஸியம்தானே!