கும்பகோணம் என்றால் சட்டென்று நினைவு வருவது மகாமகம். தனம் படம் வெளியானால், சங்கீதாவின் சேற்றுக் குளியல் மகாமகத்தின் இடத்தை பிடிக்குமாம்.
தனம் படத்தின் பாடல் காட்சிக்காக கும்பகோணம் சென்றிருக்கிறார்கள். அங்கு பாழடைந்த மாளிகையினுள் ஒரு குளம். அதில் சங்கீதா குளிக்க, பின்னணியில் பாடல் ஒலிக்க, படமாக்க வேண்டும். ஆனால் குளத்தில் நீருக்கு சமமாக சேறும் இருந்திருக்கிறது.
குளிக்க மினரல் வாட்டர் கேட்பவர்கள் நடிகைகள். அதனால் தயக்கத்துடன் சங்கீதாவிடம் குளியல் காட்சியின் முக்கியத்துவத்தை (?) விளக்கியிருக்கிறார் இயக்குனர் ஜி. சிவா. சங்கீதா லேடி விக்ரம். உடனடியாக பாடல் காட்சிக்குரிய காஸ்ட்யூமுடன் சேற்றில் இறங்கியிருக்கிறார்.
அப்புறமென்ன... சேற்றில் விழுந்த செந்தாமரையின் அழகை அப்படியே சுருட்டிக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
படத்தின் ஹைலைட் சமாச்சாரங்களில் இந்த சேற்றுக் குளியலும் ஒன்றாம்!