Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நமிதாவுக்கு கட்-அவுட்!

Advertiesment
நமிதாவுக்கு கட்-அவுட்!
, வியாழன், 5 ஜூன் 2008 (14:42 IST)
உடம்பு பெருத்தாலும் உள்ளுக்குள் ஐஸாக உருகிக் கொண்டிருக்கிறார் நமிதா. கன்னடத்தில் அவருக்கு கிடைத்த வரவேற்பே உருகலுக்கு காரணம்.

webdunia photoWD
ரவிச்சந்திரனுடன் நமிதா நடித்த நீலகண்டா கன்னடத்தில் சூப்பர் ஹிட். தலைநகரில் நமிதாவுக்கு பிரமாண்ட கட்-அவுட் வைத்து அசந்தினர் கன்னட ரசிகர்கள்.

இதில் உருகிப்போனவர் உடனடியாக இந்திரா என்ற படத்துக்கு கால்ஷீட் கொடுத்தார். விரைவில் இந்திரா வெளிவரவுள்ளது.

நமிதாவின் கவர்ச்சி யூனிவர்சல் பாஷை என்பதால், நீலகண்டாவை பிரமாண்டம் என்ற பெயரில் வெளியிடுகின்றனர். வரவிருக்கும் இந்திராவின் மொழிமாற்று உரிமை வாங்க ஏகத்துக்கும் போட்டியாம்.

முதல் படத்துக்கு கட்-அவுட் வைத்த ரசிகர்கள், இந்திராவுக்கு கட்-அவுட்டுடன் பாலபிஷேகம், பீரபிஷேகம் செய்தாலும் ஆச்சரியமில்லை. தங்களை குஷிப்படுத்தும் நமிதாவை ரசிகர்கள் குஷிப்படுத்துவதிலும் ஒரு நியாயம் இருக்கத்தானே செய்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil