யுவன் ஷங்கர் ராஜா போன்ற நல்ல கலைஞர்கள் வாழ்க்கையில் தோற்றுப் போவது கொஞ்சம் வருத்தமான செய்திதான். என்றாலும், சினிமாவில் இது சகஜம்தான். மனைவியோடு ஏற்பட்ட மன தாங்கலில் விவாகரத்து செய்துவிட்டார் யுவன்.
அதனால் மிகவும் நொடிந்துபோனவர் இசைஞானிதான். தன் இரண்டு பிள்ளைகளும் நல்லபடியாக இருக்க, யுவன் மட்டும் இப்படி தனிமையில் இருப்பதை எண்ணி வருத்தமடைந்தவர் இரண்டாவது திருமணம் செய்ய ஏற்பாடு செய்யக் கேட்டிருக்கிறார்.
ஏகப்பட்ட படங்கள் கைவசம் இருக்க, தற்போது அடுத்த திருமணத்திற்கான மனநிலையில் இல்லை. ஒப்பந்தம் செய்த படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு அப்புறம் பார்க்கலாம் என்று உறுதியாக சொல்லிவிட்டார் யுவன்.
இந்தப் படங்களை முடிக்க இன்னும் ஓராண்டு ஆகலாம். இருந்தாலும் ஒரு தந்தையாக தன் கடமையை செய்ய வேண்டும் என்று எண்ணி பெண் பார்க்க ஆரம்பித்துவிட்டார் இளையராஜா.
அதேபோல் தான் பார்க்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் ஒப்புதல் வாங்கிவிட்டார் இசைஞானி. போதும் காதலித்து செய்த திருமணத்தால் பட்ட வேதனை போதும் என்று நினைத்தவர், வெளிநாட்டில் வசிக்கும் பெண்ணாக இல்லாமல் மண்மனம் மாறாத பெண்ணாகவும் தேர்வு செய்ய இருக்கிறார்.
திருமணத்திற்கு சம்மதம் சொன்ன யுவன். ஒரு வருடம் தள்ளி வைத்திருப்பதுதான் கொஞ்சம் வருத்தமான விஷயம். 'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்' என்பதுபோல் நல்ல வரம் கிடைக்கட்டும்.