Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உளியின் ஓசை பாடல் வெளியீடு!

Advertiesment
உளியின் ஓசை பாடல் வெளியீடு!
, செவ்வாய், 3 ஜூன் 2008 (20:13 IST)
ஜெ. நந்தினி ஆர்ட்ஸ் சார்பாக நா. ஜெயமுருகன் தயாரிக்கும் படம் உளியின் ஓசை. வினித் கதாநாயகனாக நடிக்கிறார். மிகுந்த பொருட்செலவில் தயாராகும் இப்படத்திற்கு டாக்டர் கலைஞர் கதை, வசனம் எழுத, இளையராஜா இசையமைக்க, இளவேனில் இயக்குகிறார்.

இப்படத்தின் பாடல்கள் வெளியீடு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது.

சிறப்பான முறையில் நடைபெற்ற இவ்விழா தலைமையை இயக்குனர் பாலச்சந்தர் ஏற்றார். பாடல்கள் கேசட்டை கலைஞர் வெளியிட இயக்குனர் இமயம் பாரதிராஜா பெற்றுக்கொண்டார்.

மேலும் இவ்விழாவில் கவியரசு வைரமுத்து, மனோரமா, நடிகர் வினித், கனிமொழி, அமைச்சர்கள் டி.ஆர். பாலு, பொன்முடி, ஆற்காடு வீராசாமி போன்றவர்களும் திரையுலகத்தைச் சேர்ந்த பல முக்கியப் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

மேலும், முதலமைச்சர் நிவாரண நிதிக்காக ஏவி.எம். சரவணன், குகன் ஆகியோர் பத்து லட்சத்துக்கான காசோலை வழங்கினர்.

இவ்விழா தொகுப்புரையை ஹனுஹாசன் வழங்கினார். விழாவுக்கு வந்திருந்தவர்களை இயக்குனர் இளவேனில் வரவேற்றுப் பேசினார். படத் தயாரிப்பாளர் ஜெயமுருகன் நன்றி தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil