Publish Date: Mon, 02 Jun 2008 (19:58 IST)
Updated Date: Mon, 02 Jun 2008 (19:58 IST)
பாடலாசிரியர் நா. முத்துக்குமார் எத்தனையோ படங்களுக்கு பாடல்கள் எழுதிக்கொண்டு இருந்தாலும் தயாரிப்பாளர் ரத்தினம் மகன் ரவிகிருஷ்ணாவை வைத்து செல்வராகவன் இயக்கிய '7G ரெயின்போ காலனி' படம்தான் முத்துக்குமாரை அதிகப்படியான மக்களை சென்றடைய வைத்தது.
அதுமட்டுமல்லாமல் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிடம் நெருங்கிய நட்பையும் ஏற்படுத்தியது. அதற்குப்பின் யுவன் இசையமைக்கும் அநேக படங்களுக்கு முத்துக்குமார் பாடல்கள் எழுதினார்.
இதற்கிடையே, யுவனுக்கும் அவரது மனைவிக்கும் மன முறிவு ஏற்பட, விவாகரத்து செய்வதாக முடிவு செய்யப்பட்ட நேரம் ஒரு பெரும் தொகை கொடுத்து செட்டில் செய்ய வேண்டியிருந்ததால் செல்வராகவனிடம் பண உதவி கேட்க, நாசூக்காக மறுத்துவிட்டார் செல்வராகவன்.
அன்று முதல் இருவருக்குமான இடைவெளி நீண்டுக்கொண்டே சென்றது. தற்போது செல்வராகவன் இயக்கும் படத்திற்கு யுவன் இசை இல்லை.
இந்நிலையில், யாருக்கு தன் ஆதரவு என்று முத்துக்குமார் யோசிக்க, இரண்டாண்டுக்கு ஒரு படம் இயக்கும் செல்வராகவனைவிட, மூன்று மாதத்திற்கு ஒரு படம் இசையமைக்கும் யுவன்தான் சிறந்தவர் என்று முடிவு செய்துவிட்டார். அதனால் செல்வராகவன் தற்போது இயக்கும் படத்திற்கு பாட்டு எழுதித்தரக் கேட்டும் வேண்டாம் என்று மறுத்துவிட்டார் கவிஞர்.