'6.2', 'நீ வேணுண்டா செல்லம்' ஆகிய படங்களை A.P. ஃபிலிம் கார்டன் மூலம் தயாரித்தவர்கள் பழனிவேல், ஆனந்தன். இவர்கள் இவ்விரண்டு படங்களுக்குப் பின் ஆர்யா-பூஜா இணைந்து நடித்த 'ஓரம்போ' என்ற படத்தை தயாரிக்க, புஷ்கர்-காயத்ரி கணவன்-மனைவியான இவர்கள் இருவரும் சேர்ந்து இயக்கினார்கள்.
இசை பி.வி. பிரகாஷ்குமார். பாடல்கள், கதை நன்றாகவும், வித்தியாசமாகவும் இருக்க ஓரளவுக்கு ஓடி சம்பாதித்துக் கொடுத்தது. படம் பெரிய அளவில் ஹிட் இல்லை என்றாலும் நன்றாக எடுத்திருக்கிறார்கள் என்று சினிமா வட்டாரத்தில் நல்ல பெயர் எடுத்தார்கள்.
அந்தப் பெயர் தற்போது கைகொடுத்திருக்கிறது. அடுத்து இவர்கள் இணைந்து ஒரு ஆக்சன் படத்தை இயக்கவுள்ளனர். இந்தப் படத்தை இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கவுள்ளது.
பெயரிடப்படாத இப்படத்தில் 'சென்னை-28' படத்தில் நடித்த ஜெய் ஹீரோவாக நடிக்க, கெட்டவன் படத்திலிருந்து சிம்புவின் அடாவடியால் நீக்கப்பட்ட லேகா ஹீரோயினாக நடிக்க இருக்கிறார்.
தற்போது சுப்ரமணியபுரம் படத்தில் நடித்துக்கொண்டு இருக்கும் ஜெய் மெட்ராஸ் டாக்கீஸ் பேனரில் நடிப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று நண்பர்களிடம் சொல்லி பூரித்துக்கொண்டு இருக்கிறார்.