Publish Date: Mon, 02 Jun 2008 (18:22 IST)
Updated Date: Mon, 02 Jun 2008 (18:22 IST)
பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் தன் மகனை 'சூர்யா' படத்துக்காக ஹீரோவாக்கியுள்ளார். சொந்த தயாரிப்பில், பணம் பற்றி கவலைப்படாமல் இப்படத்தை தயாரித்து வருகிறார்.
அடுத்த ஹீரோ படங்களுக்கே பிரமாண்டமாக சண்டைக் காட்சிகளை அமைப்பவர், தன் மகனுக்கு எவ்வளவு சிரத்தை எடுத்துக்கொண்டு செய்வார் என்று சொல்லவே வேண்டாம்.
அதுவும் தானே படத்தை இயக்கவும் செய்வதால் நினைத்ததை நினைக்கும்படி எடுத்து வருகிறார். ஒரு சண்டைக் காட்சி க்கைமாக்ஸில் வருவதால் 46 கேமராக்கள், நூறு ஸ்டண்ட் நடிகர்களை வைத்து படம் பிடித்துள்ளார்.
இவ்வளவு பிரமாண்டமாக எடுத்துவரும் 'சூர்யா' படத்தின் பாடல் வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டை சென்னை ஃபிலிம் சேம்பரில் ஜூன் 6 ஆம் தேதி நடத்தவுள்ளார். சினிமாவில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து வி.ஐ.பி.களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
கேமராமேன், ஆர்ட் டைரக்டர், பாடலாசிரியர்கள், நடன இயக்குனர் என்று எந்தத் துறையாக இருந்தாலும் ஒரு படத்தையாவது இயக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கும். அப்படி இயக்கி வெற்றியும் பெற்றிருக்கின்றனர். அந்த வரிசையில் ஒரு ஸ்டண்ட் இயக்குனரும் படம் இயக்கியுள்ளார். வெற்றி பெறட்டும்.