Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தடம் மாறிய நடிகர்!

Advertiesment
தடம் மாறிய நடிகர்!
, திங்கள், 2 ஜூன் 2008 (16:24 IST)
கொஞ்ச காலமாக பிரச்சனை என்றால் பிரகாஷ்ராஜ் என்றாகிவிட்டது.

மனைவியை விவாகரத்து செய்யப் போவதாக வந்த செய்தியால் சில நெருங்கிய நடிக, நடிகைகள் சமரசம் செய்யப்போக, குடும்ப விஷயத்தில் யாரும் தலையிட வேண்டாம் என்று கொஞ்சம் காட்டமாகவே பேசி அனுப்பிவிட்டார்.

அத்தோடு இறுதியாக தன் டூயட் மூவிஸ் மூலம் தயாரித்த 'வெள்ளித்திரை' படம் சரியாக ஓடாத காரணத்தால் ஏகப்பட்ட பணம் நஷ்டம்.

இதுமட்டுமல்லாமல், ஒரு டி.வி. காம்பியரிங் பெண்ணோடு தொடர்பு என்று கிசுகிசு. ஒரு வடநாட்டுப் பெண்ணுடன் நாள் முழுக்க மயங்கிக் கிடக்கிறார் என்று பேச்சும் அடிபட மிகவும் நொந்துபோனார் பிரகாஷ்ராஜ்.

ஒரு வகையில் மன வேதனை, இன்னொரு பக்கம் பண நஷ்டம் என இரண்டும் பாடாய்ப்படுத்த, அதிகப் படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து அட்வான்ஸ் வாங்கினார். அத்தோடு தேதிகளையும் மாற்றிக்கொடுத்து குழப்பத்துக்கு ஆளானார்.

தமிழ்ப் படங்கள் மட்டும் இல்லாமல் தெலுங்கு படங்களிலும் இதே பிரச்சனை வர, படப்பிடிப்புக்கு வராததால் நஷ்டம் ஏற்பட சில தெலுங்கு தயாரிப்பாளர்கள் கவுன்சிலுக்குப் போக, இனி தெலுங்கில் எந்த டைரக்டரும் பிரகாஷ்ராஜை வைத்து படம் இயக்கக்கூடாது என்று தடை விதித்துள்ளது.

நல்ல நடிகர் இப்படி தடம் புரண்டுக் கிடப்பதை நினைக்க வருத்தமாகத்தான் இருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil