'மதுர' மாதேஷ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் 'அரசாங்கம்'.
இதையடுத்து விஜயகாந்த் நடிக்கும் படம் 'எங்கள் ஆசான்', சுந்தரா டிராவல்ஸ் படத்தை தயாரித்த எஸ்.வி. தங்கராஜ் தயாரிக்க, தங்கதுரை இயக்குகிறார். பொதுமக்களுக்கு நன்மை செய்யும் பாத்திரத்தில் நடிக்கவே பிரியப்படும் விஜயகாந்த், இந்தப் படத்திலும் அதுபோன்ற கேரக்டரில்தான் நடிக்கிறார்.
அதாவது பேங்க் மேனேஜராக வேடமேற்று நடிக்கும் இவர், தனக்கு தெரிந்த பேங்க் அதிகாரிகளை நேரில் சந்தித்து வங்கியில் நடக்கும் விதிமுறைகளை கேட்டுத் தெரிந்துகொள்கிறார். அத்தோடு மட்டும் இல்லாமல் வங்கிக்கும் நேரில் சென்று பார்த்து வருகிறார்.
பொதுமக்களின் பணத்தை போலி பத்திரம், போலி கையெழுத்து மூலம் கொள்ளையடிக்கும் சில சமூக விரோதிகளை தட்டிக் கேட்டு திருத்துவதுதான் இவரின் வேலை என்பதால் அதுபற்றிய விபரங்களை கேட்டு தெரிந்துகொள்வது மூலம் நன்றாக ஒன்றிப்போய் நடிப்பதுடன், நாளை அரசியல் மீட்டிங்குகளிலும் அதுபற்றி ஆளுங்கட்சியைக் கேள்வி கேட்டு மடக்கலாம் இல்லையா! அதற்காகவும்தான் இத்தனை கரிசனம் காட்டுகிறார் கேப்டன்.