இன்றைய தேதியில் அதிக படம் கையில் வைத்திருக்கும் இளம் ஹீரோ ஸ்ரீகாந்த்.
பூ, இந்திரவிழா, எட்டப்பன் என ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். இவை தவிர தெலுங்கில் மூன்று படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார்.
ஓய்வின்றி உழைக்கும் ஸ்ரீகாந்தை இயக்குனர் ஜவஹர் சொன்ன கதை கவர்ந்துள்ளது. மாறன் படத்தை இயக்கிய ஜவஹர் அப்படியென்ன மாயம் கதையில் வைத்திருந்தாரோ, கேட்டதும் கால்ஷீட் கொடுத்து திக்குமுக்காட வைத்துள்ளார். கோயார் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.
படத்துக்கு தட்சிணா என்று பெயர் வைத்துள்ளனர்.