காளி என்ற பெயர் தமிழ் சினிமாவுக் ஆகாது. காளி என்ற பெயர் இருந்தால் படம் பொருள் இழப்பை, உயிர் இழப்பை சந்திக்கும் என்பது நம்பிக்கை. அதற்கேற்ப காளி என்ற பெயர் கொண்ட அனைத்துப் படங்களும் பெரும் சேதத்தை சந்தித்திருக்கின்றன.
இது தெரிந்தும் கரண் தனது படத்துக்கு காளி என்று பெயர் வைத்தார். பெரியவர்களின் அறிவுரைப்படி இப்போது காளி என்பதை மாற்றி மலையன் என பெயர் வைத்துள்ளார்.
மலையனை கோபி இயக்குகிறார். தீ நகரில் கரணுடன் நடித்த உதயதாரா மீண்டும் மலையனில் கரணின் ஜோடியாகிறார்.
ஜூன் இரண்டாம் வாரம் மதுரையில் படப்பிடிப்பு தொடங்குகிறது.