Entertainment Film Featuresorarticles 0805 29 1080529052_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாங்காக்கை கலக்கிய மாளவிகா!

Advertiesment
பாங்காக் மாளவிகா கார்த்தீகை
, வியாழன், 29 மே 2008 (19:44 IST)
விசிலில் அறிமுகமான விக்ரமாதித்யா சத்தமில்லாமல் சாதனை படைத்திருக்கிறார். பொறாமை அதிகமுள்ளவர்கள் சாதனை பற்றி தெரிந்து கொள்ளாமலிருப்பது நலம்.

கார்த்தீகை படத்தில் விக்ரமாதித்யாவுக்கு இரண்டு ஜோடிகள். மாளவிகா, சமிக்சா. இயக்கம் வீரா.

இதன் பாடல் காட்சி சமீபத்தில் பாங்காக்கில் எடுக்கப்பட்டது. மொத்தம் மூன்று பாடல்கள். ஒன்று விக்ரமாதித்யா - மாளவிகா டூயட். இன்னொன்று விக்ரமாதித்யா - சமிக்சா டூயட். விக்ரமாதித்யாவுடன் மாளவிகா, சமிக்சா இழைந்து ஆடிய பாடல் மூன்றாவது!

மூன்று பாடல்களுக்குப் பிறகும் முழுதாக வீடு திரும்பியிருக்கிறார் விக்ரமாதித்யா. இனி உள்ளூரில் படப்பிடிப்பாம். இன்னும் பல பாடல்கள் பாக்கியிருக்கிறதாம்.

இதை கேள்விப்பட்ட பிறகு கார்த்'தீ'கையில் உள்ள தீ பல நடிகர்களின் வயிற்றில் எரிகிறதாம்.

Share this Story:

Follow Webdunia tamil