சென்னையில் ஒரு மழைக்காலம் படத்திற்குப் பிறகு யு டி.வி. தயாரிப்பில் மகேஷ்பாபு நடிக்கும் தெலுங்குப் படத்தை தயாரிக்கவில்லையாம் கெளதம்.
பிறகு? ஏற்கனவே திட்டமிட்டபடி அஜித்தை இயக்கப் போகிறாராம். அஜித்துக்கு ஜோடி சமிரா ரெட்டி.
கெளதம் தனது போட்டோன் பேக்டரி நிறுவனத்தை தனித்த தயாரிப்பு நிறுவனமாக மாற்ற உள்ளார். பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம் படங்களின் இணை தயாரிப்பு கெளதமின் போட்டோன் பேக்டரி என்பது குறிப்பிடத்தக்கது.
சொந்தமாக தயாரிக்கும் படத்தில் தனது உதவியாளர்களுக்கு வாய்ப்பளிக்கப் போகிறாராம். வருட இறுதிக்குள் அதற்கான அறிவிப்பு வெளிவரயிருக்கிறது.