பருத்தி வீரனில் தகரக் குரல் ப்ரியாமணியை சொந்தக் குரலில் அமீர் பேச வைத்தாலும் வைத்தார். பேசினால் சொந்தக் குரல்தான் என கொடி தூக்க ஆரம்பித்துவிட்டனர் இடி போன்ற குரல் இருக்கும் நடிகைகள்.
பாவனா அதில் ஒருவர். பார்க்க கொடி போலிருக்கும் இவரது குரலில் மென்மைக்கு பதில் வன்மையே அதிகம் தொனிக்கும். ஜலதோஷத்தால் அடைத்தது போன்ற குரல் இவருடையது. இந்தக் குரலை வைத்து டப்பிங் பேசுவேன் என அடம்பிடித்து, அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.
வினயுடன் பாவனா நடித்திருக்கும் ஜெயம் கொண்டானில் சொந்தக் குரலில் பேசியிருக்கிறார் பாவனா. இதில் மிளகாய் மண்டி வைத்திருப்பவரின் மகளாக நடித்துள்ளார் பாவனா. கேரக்டரில் மட்டுமின்றி குரலிலும் கொஞ்சம் காரம் இருந்தால் நல்லது என இயக்குனர் கண்ணன் நினைத்திருக்கலாம்.
ஆனால், கேட்கப் போவது நம்முடைய காது அல்லவா!