Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கைது பயமும் அசின் கடிதமும்!

கைது பயமும் அசின் கடிதமும்!
, வெள்ளி, 30 மே 2008 (16:00 IST)
வேலைக்கார பெண் விவகாரத்தில் ரொம்பவே வெலவெலத்துப் போயுள்ளார் அசின். விசாரணை, கைது என வில்லங்கம் விஸ்வரூபமெடுக்குமோ என்ற பயத்தில் காவ‌ல் துறைக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்!

இந்தி கஜினியின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருப்பதால், உடனடியாக சென்னை வரமுடியாது என்றும், படப்பிடிப்பு முடிந்ததும் ஓரிரு நாளில் சென்னை வந்து நேரில் விளக்கமளிப்பதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். வேலைக்கார பெண் பியூலா சகல செளபாக்யங்களுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அசினின் லெட்டர்பேடில் இதே விஷயத்தை வேறு வார்த்தைகளில் தெரிவித்துள்ளார் பியூலா. அசின் மீது எந்தவித புகாரும் தரவேண்டாம் என தனது அம்மாவுக்கு வேண்டுகோளும் விடுத்துள்ளார் பியூலா.

ஒகேனக்கல் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளாததற்கு பல நாட்கள் கழித்து வேண்டா வெறப்பாக விளக்கக் கடிதம் அளித்தார் அசின். இப்போது கடிதம் அசுர வேகத்தில் வந்திருக்கிறது. எல்லாம் பயம் செய்யும் மாயம்!

Share this Story:

Follow Webdunia tamil