மலையாள நடிகர் சங்கமான அம்மா, சங்கத்தின் வளர்ச்சி நிதிக்காக படம் தயாரிக்கிறது. டுவெண்டி 20 என்ற அந்தப் படத்தின் தயாரிப்பு பொறுப்பு நடிகர் திலீப் ஏற்றுக் கொண்டுள்ளார். இயக்கம் ஜோஷி.
மம்முட்டி, மோகன்லால் தொடங்கி மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் இதில் நடிக்கிறார்கள். ஏறக்குறைய படம் முடிவடைந்துவிட்டது. ஒரேயொரு பாடல் காட்சி மட்டும் பாக்கி.
இதில் கமல், ரஜினி, விக்ரம் ஆகியோர் இடம்பெற்றால் படத்தின் விற்பனை மதிப்பு கூடும் என அம்மா நினைக்கிறது. இதற்காக ரஜினி, கமலிடம் திலீப் தொடர்பு கொண்டு கேட்க இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.
இணைந்து நடிப்பதில்லை என்பதில் உறுதியாக இருப்பவர்கள், அம்மாவின் விருப்பத்துக்கு இணங்குவார்களா?