எப்போது என்ன செய்வார் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் செய்யும்போது அது பேசக் கூடியதாக இருக்கும். விஜய டி.ராஜேந்தர் குறித்துதான் சொல்கிறோம்.
பருத்திவீரன் பாதிப்பில் ஒருதலைக் காதல் என்ற கிராமத்துப் படத்தை எடுக்கிறேன் என்று பத்திரிகைகளை அழைத்துச் சொன்ன விஜய டி.ஆர். படத்தில் சில ஆச்சரியங்களை வைத்துள்ளார்.
இவர் ஃபிலிம் இல்லாமல் படம் எடுத்தாலும் பிரமாண்ட 'செட்'கள் இல்லாமல் படம் எடுக்காதவர். முதன்முறையாக ஒரு அரங்கு கூட இல்லாமல் ஒருதலைக் காதலை எடுக்கிறார்.
இன்னொரு ஆச்சரியம், படத்தில் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் கிராமத்துப் பின்னணி உள்ளவர்களாம். தமிழ் தெரிந்த ஒரு தமிழச்சியையே நாயகியாக்குவேன் என்று சபதம் செய்து, அந்த அதிர்ஷ்டகார தமிழச்சியை தேடு தேடென்று தேடி வருகிறார்.
படம் முடியும்போது ஆச்சரியங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம்!