காமெடி படம் எடுத்த ஷக்தி சிதம்பரத்துக்கு சிரிப்பு கைகொடுக்கவில்லை. 'சண்டை' என்று ஒரேயொரு ஆக்சன் படம் எடுத்தார். கல்லா நிறைந்ததுடன், ஷக்தி சிதம்பரத்தின் பெயரும் பிரபலமானது.
இனி ஆக்சன்தான் என்று அறிவித்தவர், சண்டை ஹீரோ சுந்தர் சி-யை வைத்து 'இடி' என்ற படத்தை எடுக்கயிருப்பதாகவும், நமிதா நடிப்பதாகவும் தெரிவித்தார். வெளிநாட்டில் கதை விவாதமும் நடந்தது.
ஷக்தி சிதம்பரம் இடி அறிவிப்பை வெளியிட்ட வேகத்திற்கு இந்நேரம் புயலடித்து மழை பெய்திருக்க வேண்டும். ஆனால், அதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
லாரன்சை வைத்து 'ராஜாதிராஜா' படத்தை எடுப்பதில் மும்முரமாக இருப்பவர், அடுத்து சிம்புவிடம் கால்ஷீட் கேட்டுள்ளார். அப்படியானால் இடி?
சுந்தர் சி-க்கும் ஷக்திக்கும் சின்ன கருத்து வேறுபாடு. அதனால் அறிவிப்போடு ஆஃப் ஆகிவிட்டதாம் இடி.
உண்மையா டைரக்டர் சார்?