காத்தவராயனுக்குப் பிறகு கரண் நடிக்கும் இரண்டு படங்கள் காளி, காந்தா. இரண்டிற்கும் சினேகாவை முயற்சி செய்தும் கால்ஷீட் கிடைக்கவில்லை. அதிலும் காந்தாவில் சினேகாவை நடிக்க வைக்க, வித்தைகள் பல காட்டியும் சிக்கவில்லை சினேகா.
சாதாரணமாக ஒரு படத்துக்கு பத்து லட்சம் வாங்குகிறார் சினேகா. காந்தாவில் பதினைந்து தருவதாகக் கூறியும் கால்ஷீட் பெயரவில்லை. இப்போது 'நெஞ்சிருக்கும் வரை' நாயகி தீபாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
சரணின் உதவியாளர் பாடி சந்திரன் இயக்கும் இப்படத்தை ஜூலை 11 தொடங்க திட்டமிட்டுள்ளனர். ஸ்கிரிப்ட் தயாராக இருப்பதால் இடைவெளியே இல்லாமல் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாம்.
ஏபி ஃபிலிம் கார்டன் படத்தை தயாரிக்கிறது.