பல வருடம் பட்டினி கிடந்த டைனசர்கள் போல வந்திறங்கியிருக்கின்றன கார்ப்பரேட் கம்பெனிகள். ஒரே நேரத்தில் ஒன்பது படங்கள் வரை தயாரிக்க அவர்கள் ரெடி. இந்த மெகா டைனசர்களில் ஒன்று வார்னர் பிரதர்ஸ். சௌந்தர்யாவின் ஆக்கர் ஸ்டுடியோவுடன் இணைந்து படங்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது இந்த ஹாலிவுட் நிறுவனம்.
முதல் படம் அஜித்தை வைத்து 'பில்லா 2008' இயக்குவது விஷ்ணுவர்தன். முதல் ப்ராஜெக்ட் வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து வார்னர் வலைவீசியிருப்பது தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவிற்கு. ஆந்திராவின் கில்லியான இவர் இயக்குனர் பூரி ஜெகன்நாத்துடன் இணைந்தால் திரையரங்கில் புயல் கிளம்பும். போக்கிரி ஒன்றே போதும் இந்தக் கூட்டணியின் பெருமை சொல்ல.
வார்னர், ஆக்கர் கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் படத்தில் இந்த கூட்டணியும் இடம்பெறுகிறதாம்.
அஜித், மகேஷ் பாபுவை வீழ்த்தியவர்கள், அடுத்து யார் அகப்படுவார்கள் என காத்திருக்கிறார்கள்.
டாலரில் சம்பளம் தரும் டைனசர்கள், விழுங்கமாட்டார்களா என்று ஏக்கத்துடனிருக்கிறார்கள் நடிகர்கள்.