இலையுதிர் காலம் மாதிரி இது இசையுதிர் காலம். அடுத்தடுத்து உடைந்து கொண்டிருக்கின்றன இசைக் கூட்டணிகள்.
உடைப்புக்கு பிள்ளையார் சுழி போட்டவர்கள் செல்வராகவன் - யுவன் சங்கர் ராஜா. பிறகு, ஹாரிஸ் ஜெயராஜ் - கௌதம் கூட்டணி சென்னையில் ஒரு மழைக்காலத்தில் பிரிந்தனர்.
மூன்றாவதாக சரண் - பரத்வாஜ். மீடியா ஒன் குளோபல் தயாரிக்கும் மோதி விளையாடு படத்தில் பரத்வாஜ் இல்லை. அவருக்கு பதில் ஹரிஹரன் - லெஸ்லி லெவிஸ் இணைந்து இசையமைக்கின்றனர்.
யார்யா இந்த புதிய கூட்டணி என்று ஆச்சரியமாக இருக்கும். நமது போனிடெயில் பாடகர் ஹரிஹரனும் அவரது நண்பர் லெஸ்லி லெவிஸ்தான் இவர்கள். லெவியை கசின்ஸ் இசை ஆல்பத்தில் ஹரிஹரனுடன் இணைந்து பாடுவாரே ஒரு கொண்டை ஆசாமி... அவர்தான்!
ஹரிஹரனும் லெவிஸும் ஒரு படத்துக்கு இசையமைப்பது இதுவே முதன் முறை.