ஃபிளாப் கொடுத்த நடிகைகள் இன்டஸ்ட்ரியில் தங்களை ஃப்ரெஷ்ஷாக காட்ட செய்யும் உபயம் பெயரை மாற்றுவது. ஆனால் நடிகர்கள்?
தோல்வியில் துவளும்போது துரதிர்ஷ்டம் ஏதோ பெயரில் ஒட்டிக் கொண்டிருப்பது போல், பெயரை மாற்றுவார்கள். பதினேழு வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கிறார் விக்னேஷ்.
சினிமா எனும் பரமபத விளையாட்டில் எப்போதும் விக்னேஷின் காய் பாம்பின் வாயில். பிறகு எப்படி வரும் முன்னேற்றம். சமீபத்தில் பிள்ளையார்பட்டி கோயிலுக்குச் சென்றவர் நியூமராலஜிபடி பெயரை விக்னேஷ்வரன் என்ற மாற்றியிருக்கிறார்.
அதேபோல், ஷாலினியின் அண்ணன் ரிச்சர்டும் தனது பெயரை ரிஷி என்று சுருக்கியிருக்கிறார். நாளை படத்திற்குப் பிறகு தெலுங்குப் பக்கம் போனவர், மதர்லேண்ட் பிக்சர்ஸின் 'ஏன் இப்படி மயக்கினாய்' படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கிறார். இவருக்கு ஜோடி கீரத். சில்லுனு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கம்.
இந்தப் படம் முதல் ரிச்சர்டின் பெயர் ரிஷி. பெயர் மாற்றத்திற்குப் பிறகாவது பரமபத விளையாட்டில் ஏணி கிடைக்குமா இவர்களுக்கு?