Publish Date: Tue, 27 May 2008 (19:03 IST)
Updated Date: Tue, 27 May 2008 (19:02 IST)
யானை வேட்டை என்றாலும் எத்தனை நாள்தான் காத்திருப்பது. யானையை சாய்க்கிற நேரத்தில் நான்கு புள்ளிமான்களை பிடித்திருக்கலாம் என நிகைக்க ஆரம்பித்துள்ளார் ஏ.ஆர். முருகதாஸ்.
இந்தி கஜினி, கன்னித்தீவு மாதிரி இழுத்துக்கொண்டே போகிறது. கிளைமாக்ஸை எடுத்து படத்தை ரிலீஸ் செய்ய தீபாவளி ஆகிவிடுமாம்.
இதன் நடுவில் சூர்யாவை வைத்து இயக்கும் கதையை ஒரு ஃபார்முக்கு கொண்டு வந்திருக்கிறார். தயாரிப்பும் நானே என்று சொல்லி வந்தார் முருகதாஸ். இப்போது அவர் இல்லையாம், அவரது நீண்டகால உதவியாளர் சம்பத் தயாரிக்க, சூர்யா நடிக்க, முருகதாஸ் இயக்குகிறாராம்.
தயாரிப்பில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றத்தின் காரணம் புரியவில்லை. பினாமியோ என புரணி பேசவும் செய்கிறார்கள். முருகதாஸ் மௌனம் கலைத்துப் பேசினால் குழப்பம் நீங்கிவிடும்.