வளர்திரு செல்வன் கரணும், வைகைப் புயலும் இணைந்து கலக்கும் காத்தவராயன்!
வருகிற விளம்பரங்களில் எல்லாம் கதாநாயகன் பெயரும் காமெடியன் பெயரும் இணைந்தே வருகிறது. காத்தவராயனின் பிஸினஸில் பெரும்பங்கு வடிவேலுவை சார்ந்தது என்பதால்தான் இந்த மரியாதை.
கருப்பசாமி குத்தகைதாரருக்குப் பிறகு கரண், வடிவேலு காம்பினேஷனில் வரும் படம் இது. கந்து வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொள்ளும் கதாபாத்திரம் வடிவேலுவுக்கு. கவர்ச்சிக்கு விதிஷா, ராதா.
விதிஷாவை வெள்ளை உடையுடன் அருவியில் நனையவிட்டு ஒரு பாடல் எடுத்துள்ளனர். ராதாவின் கனவுப் பாடல் எடுக்கப்பட்டது வெளிநாட்டில்.
வருகிற 30 ஆம் தேதி சலங்கை துரை இயக்கியிருக்கும் இப்படம் திரைக்கு வருகிறது. வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையுடன்!