ஸ்ருதி அறிமுகமாவதாக இருந்த என்றென்றும் புன்னகை தொடங்கப்படாமலே கைவிடப்பட்டுள்ளது.
மாதவன் ஜோடியாக ஸ்ருதி ரிஷிகாந்தின் இயக்கத்தில் நடிப்பதாகச் சொல்லப்பட்டது. மியூசிகல் சப்ஜெக்ட். அதுதான் நடிக்கச் சம்மதித்தேன் என்றார் ஸ்ருதி.
இந்தப் படத்திற்காக லண்டன் சென்று 10 கிலோ எடை குறைத்து இளமைக்குத் திரும்பினார் மாதவன். இப்போது எல்லாமே வீணாகியிருக்கிறது.
முதலில் ரிஷிகாந்த் என்றென்றும் புன்னகை புராஜெக்ட்டில் இருந்து விலகினார். அவரோடு சேர்ந்து படத்தின் கதையும் மாறியது. தயாரிப்பும் ஞானம் ஃபிலிம்ஸ் கைகளுக்கு வந்தது.
இத்தனையும் மாறிய பிறகு கமலின் மகள் மட்டும் மாறாமல் இருப்பாரா. அவரும் நடிப்பதற்கு மறுக்க அறிவிப்போடு முடங்கிப்போனது என்றென்றும் புன்னகை.
சரி ஸ்ருதியின் திரைப் பிரவேசம் எப்போது?
தசாவதாரம் ரிலீஸ் போலவே பதில் சொல்ல முடியாத கேள்வி இது.