காத்திருந்தவன் உணவை நேற்று வந்தவன் பறித்தால் எப்படி இருக்கும். ரமணாவிடம் கேட்டால், அடநத ரணமான கதையை ரூம் போடாமலே சொல்வார்.
எஸ்.ஏ.சந்திரசேகரன் தனது வி.வி.கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கும் பந்தயம் படத்தில் இயக்குநர் ரமணா வில்லனாக நடிப்பதாகக் கூறப்பட்டது. நடிப்பில் பிரகாஷ் ராஜ் மாதிரிப் பொளந்து கட்டுவேன் என்று மார் தட்டினார் ரமணா. அதுதான் வினையாகி விட்டது.
பிரகாஷ் ராஜ் மாதிரி என்ன மாதிரி.... அவரையே நடிக்க வைக்கிறேன் என்று திட்டத்தைத் திருப்பியிருக்கிறார் எஸ்.ஏ.சி. இப்போது ரமணாவுக்குப் பதில் பிரகாஷ் ராஜ் நடிப்பதாகக் கேள்வி.
முன்னணி ஹீரோ ரேஞ்சுக்கு செல்லமே வில்லன் கேட்ட சம்பளத்தையும் தர சம்மதித்திருக்கிறார். ரணமாகிப் போயிருக்கிறார் ரமணா.