காத்தவராயனுக்கு அடுத்து காளி, கந்தா என இரு படங்கள். இன்னும் பல படங்கள் காத்திருப்பு வரிசையில். மேலோட்டமாகப் பார்த்தால் பிரகாசமாகவே தெரியும் கரணின் கேரியர்.
ஆனால், அவருக்குள் ஓர் அடங்காத ஆசை. சினேகாவுடன் எப்படியும் ஜோடி சேர வேண்டும்!
கதை சொல்ல வருகிறவர்களிடம் சினேகாவின் கால்ஷீட் வாங்கக் கொக்கி போடுகிறார். கந்தாவிலும் போட்டார் சினேகா கொக்கி. சாதாரணமாக பத்து லட்சம் வாங்குகிறார் சினேகா. கந்தாவில் கரண் ஜோடியாக நடிக்க பதினைந்து லட்சம் வரை தரத் தயாராக இருந்தனர். எல்லாம் கரண் ஏற்பாடு.
சினேகா கழுவுற மீனில் நழுவுற டைப். கரணின் கொக்கிக்குச் சிக்காமல், கால்ஷீட் பிஸி காரணம் கூறி கிரேட் எஸ்கேப்.
சினேகாவின் கால்ஷீட் இருந்தால் கரண் படம் கிடைக்கும். யாராவது வைத்திருக்கிறீர்களா?