Publish Date: Sat, 24 May 2008 (18:20 IST)
Updated Date: Sat, 24 May 2008 (18:20 IST)
கட்சியில் எஸ்.வி.சேகரின் இடம் ஒரு கேள்விக்குறி என்கிறது ஒரு தகவல். எஸ்.வி.சேகரின் வீட்டு விசேஷங்களுக்கு வருகை தருவதில்லை ஜெயலலிதா. ஆனாலும், சேகரின் அம்மா விசுவாசத்திற்குக் குறைவில்லை.
தனது மகன் அஸ்வின் சேகர் நடிக்கும் படத்திற்கு நினைவில் நின்றவள் என்ற பெயரைத் தேர்வு செய்துள்ளார் எஸ்.வி.சேகர்.
நாற்பதைக் கடந்தவர்களுக்கு இந்தப் பெயர் நன்றாக நினைவிருக்கும். 1975- இல் ஜெயலலிதாவும் ரவிச்சந்திரனும் இணைந்து நினைவில் நின்றவள் என்ற படத்தில் நடித்தனர். தயாரித்து இயக்கியவர் முக்தா சீனிவாசன். அந்தப் பெயரையே மகன் படத்திற்குத் தேர்வு செய்துள்ளார் எஸ்.வி.சேகர்.
புதிய கட்டுப்பாட்டின்படி பழைய படங்களின் பெயரை அந்தத் தயாரிப்பாளர், அவர் இல்லை என்றால் அவரின் வாரிசுகளின் அனமதி பெற்றே பயன்படுத்த வேண்டும். அதன்படி முக்தா சீனிவாசனிடம் பெயரைப் பயன்படுத்த முறைப்படி அனுமதி வாங்கியிருக்கிறார் எஸ்.வி.சேகர்.