Publish Date: Sat, 24 May 2008 (18:19 IST)
Updated Date: Sat, 24 May 2008 (18:18 IST)
மலையாளப் படவுலகம் வேஸ்ட். தமிழே பெஸ்ட். தமிழில் மட்டுமே கவனம் செலுத்தப் போகிறேன்!
மலையாளப் படவுலகை இப்படிக் கடுமையாக வெறுப்பவர் நரேன். கேரள நடிகர் சங்கம் அம்மாவின் டுவென்டி 20 படத்தில் நடிக்காததால் அங்குள்ளவர்களுக்கு நரேன் மீது கோபம்.
மலையாள சூப்பர் ஸ்டார்கள் தன்னைப் போன்ற இளைஞர்களை வளர விடுவதில்லையென அவர்கள் மீது நரேனுக்கு கோபம். இந்த மோதலில் முகிழ்த்த முடிவுதான் முதல் பாராவில் நீங்கள் படித்தது.
சித்திரம் பேசுபடி வெளியான நேரம் மலையாள சானல் ஒன்றில், தமிழர்கள் ஜிகினா உடை போடுகிறவர்களை மட்டுமே ஹீரோவாக ஒப்புக் கொள்வார்கள் என்றெல்லாம் தமிழர்களையும் தமிழ் சினிமாவையும் கிண்டலடித்தவர் நரேன். தாராளமான சம்பளமும், தேடி வருகிற வாய்ப்புகளும் நரேனை மாற்றிப்பேச வைத்திருக்கிறது.
வாய்ப்பிற்கு பிறகு தகுந்தபடிதான் நாக்கு சுழலும் என்பது நூறு சதம் உண்மை!