ஒரு நேரத்தில் ஒரு படமே நடிப்பார் விஜய். ஆறு மணிக்கு மேல் நோ கால்ஷீட். படம் முடிந்து ரிலீஸான சில நாளில் ஆள் காணாமல் போவார். எங்கே என்று தேடினால், குடும்பத்தோடு ஏதாவது வெளிநாட்டில் இருப்பதாக சேதி வரும்.
குருவியில் வேலை கொஞ்சம் அதிகம். சென்னை, மலேசியா, ஆந்திரா என்று வில்லன்களை துரத்திச் சென்று அடித்ததில் ஆள் ரொம்பவே சோர்வாகி விட்டார். கொளுத்தும் கோடை வேறு. விஜய் எங்கிருப்பார் என்று நினைக்கிறீர்கள்? குளு குளு கலிபோர்னியாவில்!
குடும்பத்தோடு ஓய்வுக்காக சென்றிருக்கிறார். சென்னை திரும்புதல் அடுத்த மாதமே. வந்ததும் பிரபுதேவாவின் படம். வெளிநாட்டில் இருப்பதால் சென்னை இரண்டு ஆட்டங்களில் ரசிகர்களை உற்சாகப்படுத்த வரமாட்டாராம் விஜய். காசு வாங்கியாகி விட்டது. இனி வந்தால் என்ன வராவிட்டால் என்ன!