ஒரு இளம்பெண். அவளைச் சுற்றும் நான்கு இளைஞர்கள். கால் சென்டரின் இரவு வாழ்க்கை மற்றும் மாறிவரும் கலாச்சார மீறல்கள்.
கவுதம் வாசுதேவ மேனனின் 'சென்னையில் ஒரு மழைக்காலம்' தயாராகிறது. கால் சென்டரில் வேலை பார்ப்பவராக த்ரிஷா. அவரைச் சுற்றும் நான்கு இளைஞர்களாக கவுதமின் அசிஸ்டெண்ட் வீரா, எஸ்.எஸ்.மியூஸிக் ஷாம், உன்னாலே உன்னாலே படத்தில் வரும் டான்சர் சதீஷ் மற்றும் நடிகை மகேஸ்வரியின் தம்பி கார்த்திக்.
முதன் முறையாக தனது இசைக் கூட்டணியை இந்தப் படத்தில் மாற்றியிருக்கிறார் கவுதம். மின்னலே படத்தில் இணைந்த கவுதமும், ஹாரிஸ் ஜெயராஜூம் இதுவரை பிரிந்ததில்லை. முதன் முறையாக 'சென்னையில் ஒரு மழைக்காலத்தில்' ஹாரிஸுக்குப் பதில், ஏ.ஆர்.ரஹ்மான்!
இசைப்புயல் என்பதால் நபர் மாறினாலும் தரம் மாறப்போவதில்லை.