சிலருக்கு மட்டுமே அந்த வரம் உண்டு. கண்ணை மூடி ஒன்றில் இறங்கினால் ஸ்டார்ட்டிங் ட்ரபிள், மேக்கிங் ட்ரபிள் என்று எந்த ட்ரபிளும் பக்கத்தில் அண்டாது. அப்படியொரு பாக்கியசாலி பி.வாசு.
நேற்று தொடங்கியது போல் இருந்தது. அதற்குள் ஆடியோ ரிலீஸ்வரை கொண்டு வந்து விட்டார் குலேசனை. யூனிட்டில் நாம் சேகரித்த வரையில் கிடைத்த ஷெட்யூல்ட் இது.
ஜூன் ஒன்றிற்கு மேல் கேரளா. அங்கு ஒரு பாடல் காட்சி. ஜூன் மூன்றிலிருந்து பதினைந்து வரை ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டி. அத்தோடு பூசணிக்காய் உடைத்து ஜூன் 20 பிரமாண்டமாக பாடல்கள் வெளியீடு.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகள் என்பதால் ஒரே நாளில் அதாவது காலையில் சென்னையிலும், மாலையில் ஹைதராபாத்திலும் இசை வெளியீட்டு விழா. விழா நாயகர் ரஜினி என்பதை சொல்லத் தேவையில்லை.
படம் எப்போது ரிலீஸுஸ்கண்ணா?