ஆரம்பகட்ட வேலைகளே பிரமாண்டத்தின் பிள்ளைகளாக இருக்கிறது. ரோபோவுக்காக ஒரு பெரிய 'லேப்'பே தயாராகிறது என்றால்...?
சீன் பை சீன் கிராஃபிக்சில் கிறங்கடிக்கப் போகிறது ரோபோ. அதற்காக ஜாப் ஒர்க் போலப் போய் வந்து வேலை பார்ப்பதெல்லாம் ஆகிற கதையில்லை. தனக்கே தனக்கென்று தனியிடம் வேண்டும். கிராஃபிக்ஸிற்கு, பிராசஸிங்கிற்கு இன்னபிற வேலைகளுக்கு.
அதற்காக ஜெமினி லேபில் தனியிடமே தயாராகிறது. இங்கு ரோபோ வேலைகள் மட்டுமே நடக்கும். ஈ என்ன புகையே நுழைய முடியாதவாறு இருக்குமாம் இந்த இடத்தின் செக்யூரிட்டி. சிவாஜி ரிலீஸ் ஆகும் முன் சீக்ரெட்டாக வைத்திருந்த மொட்டை கெட்டப் லீக் ஆனதே இந்த டைட் செக்யூரிட்டிக்குக் காரணம்.
ரோபோவுக்காக அமெரிக்காவில் இருந்து வந்திறங்கிய கம்ப்யூட்டர்களை பொருத்தும் பணி தற்போது நடந்து வருகிறது. ஸ்டார்ட் கேமரா சொன்ன பிறகு ஜெமினி லேப் பக்கம் சும்மா கூட நடந்து போக முடியாது. செக்யூரிட்டிகள் பாரா பத்தடி தள்ளியே நடக்க வைக்கும்.
கம்ப்யூட்டர் சமாச்சாரம் என்றாலும் கதை என்னவோ, வழக்கமான இந்தியாவை வல்லரசாக்கும் நாயகனைப் பற்றியதாகவே இருக்கும்.