பார்வை ஒன்றே போதுமே படத்தை இயக்கிய முரளிகிருஷ்யா புதிய பலத்துடன் திரும்பி வந்திருக்கிறார். பலம் என்றால் புரொடியூசர். தொடங்கினால் படத்தை முடிக்கும் அளவுக்கு பணம் உள்ளவர்.
தனது புதிய படத்துக்கு முரளிகிருஷ்ணா வைத்திருக்கும் பெயர், பலம்! கேட்கும்போதே ஆக்சன் கதை என்பது புரிந்து போகும்.
படத்துக்கு ஹீரோ, ஹீரோயின், தொழில்நுட்பக் கலைஞர்கள் யாரும் முடிவாகவில்லை. அனேகமாக 'பிடிச்சிருக்கு' அசோக் பலத்தின் நாயகனாகலாம்.
விரைவில் படம் குறித்த அறிவிப்பு வெளிவர உள்ளது.