Publish Date: Fri, 23 May 2008 (19:40 IST)
Updated Date: Fri, 23 May 2008 (19:40 IST)
காக்க காக்க படத்தில் காக்கி போட்ட போலீஸ் வேடம் டேனியல் பாலாஜிக்கு. அடுத்தப்படம் வேட்டையாடு விளையாடுவில் மெயின் வில்லன். இன்று அவர் முத்திரை படத்தின் நாயகர்களில் ஒருவர்.
பாலாஜி அளவுக்கு கதாநாயகன் ஆக கார்த்திக்குக்கு அதிக காலம் பிடிக்கவில்லை. ஒரே படத்தில் நாயகனாக புரமோஷன்.
இது நவரச நாயகன் கார்த்திக் அல்ல என்பது புரிந்திருக்கும். இவர் கருத்தம்மா மகேஸ்வரியின் தம்பி. வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவின் நண்பராக அறிமுகம். அடுத்தது 'சென்னையில் ஒரு மழைக்காலம்'.
வாரணம் ஆயிரத்தில் நண்பராக அறிமுகப்படுத்திய கெளதம், தனது அடுத்தப் படமான சென்னையில் ஒரு மழைக்காலத்தில் கார்த்திக்கை கதாநாயகனாக்கியிருக்கிறார் (நால்வரில் ஒருவர்). ஒரே படத்தில் ஹீரோவான சந்தோஷத்துடன் த்ரிஷாவை காதலிக்கப் போகும் திரில்லில் இருக்கிறார் கார்த்திக்.