Publish Date: Fri, 23 May 2008 (19:38 IST)
Updated Date: Fri, 23 May 2008 (19:37 IST)
இரண்டு பிரபலங்களின் வாரிசுகள் ஒரே படத்தில். இருவருக்குமே அதுதான் முதல் படமும் கூட. எதிர்பார்ப்புக்கு சொல்லவும் வேண்டுமா. சக்கரக்கட்டி படத்தைப் பற்றிதான் சொல்கிறோம்.
கலைப்புலி தாணுவின் மகன் கலா பிரபு இயக்குனராக அறிமுகமாகும் இந்தப் படத்தில் பாக்யராஜின் வாரிசு சாந்தனு ஹீரோ. வேட்டியை மடிச்சுக்கட்டு படத்தில் சாந்தனு நடித்திருந்தாலும், அப்போது அவர் மாஸ்டர் சாந்தனு. ஹீரோவாக அவருக்கு இதுவே முதல் படம்.
முழுக்க புதுமுகங்கள் என்பதால் இசைக்கு ஏ.ஆர். ரஹ்மான்தான் என்பதில் உறுதியாக இருந்தார் கலா பிரபு. உடனடியாக டியூன் கிடைக்காது, அவ்வப்போது போட்டுத் தருகிறேன் என்ற நிபந்தனையுடன் படத்துக்கு இசையமைக்க ஒப்புக்கொண்டார் ரஹ்மான். அதன்படி கடைசி பாடலையும் தவணை முறையில் தந்துவிட்டாராம் இசைப்புயல். தவணை முறையில் தந்தாலும் குறைசொல்ல முடியாத தரத்தில் உள்ளதாம் பாடல்கள்.
அடுத்த மாதம் ஆடியோ வெளியீடு. தாணு படம். விழா பிரமாண்டமாகவே இருக்கும், சந்தேகமில்லை!