Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் இஸ்ரேல் திரைப்பட விழா!

Advertiesment
சென்னையில் இஸ்ரேல் திரைப்பட விழா!
, வெள்ளி, 23 மே 2008 (16:15 IST)
இஸ்ரேலின் 60வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ICAF சென்னையில் இஸ்ரேல் திரைப்பட விழாவை நடத்துகிறது. ICAF உடன் மும்பை இஸ்ரேல் தூதரகம், இந்தோ-இஸ்ரேல் நட்புறவு கழகம் ஆகியவையும் கைகோர்த்துள்ளன.

சென்னை ஃபிலிம்சேம்பர் திரையரங்கில் வரும் 26 முதல் 29 வரை இஸ்ரேல் நாட்டு திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

முதல் நாள் 'Out of Sight' திரைப்படம் திரையிடப்படுகிறது. இரண்டாம் நாள் இரு படங்கள், 'The Schwartz Dynasty' மற்றும் Foul Gesture.

28 ஆம் தேதி Sallah Shabati மற்றும் Free Zone ஆகியன திரையிடப்படுகிறது. இதில் Sallah Shabati ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இறுதி நாளான 29 ஆம் தேதி போர் படமான Beaufort திரையிடப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு 98401 51956 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Share this Story:

Follow Webdunia tamil